இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தொடர் அழுத்தத்தினால் சுற்றுநிரூபத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.

இ.தொ.காவினால் பின்வாங்கிய பதிவாளர் நாயகம் | Registrar General Who Withdrew From E T C

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தொடர் அழுத்தம் காரணமாக பதிவாளர் நாயகத்தின் சுற்றுநிரூபத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழில் இனத்தினை இந்திய வம்சாவளியினர் என்பதை நீக்கி பதிவாளர் நாயகத்தால் அண்மையில் வெளியிட்ட சுற்றுநிரூபத்த்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தது.

 பதிவாளர் நாயகத்தின் சுற்றுநிரூபத்த்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில்அதிபர், ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுச் சென்றும் இருந்தனர்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தொடர் அழுத்தத்தினால் மீண்டும் இந்திய வம்சாவளியினர் என்று பதிவிடலாம் என்ற ஒப்புதல் கடிதத்தை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு எழுத்து மூலம் பதிவாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.