தென்கிழக்கு ஆசியாவின் சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக சர்வதேச விமானப் போக்குவரத்து அதிகாரசபை பெயரிட்டுள்ளது.

 


விமான சேவைகளை வழங்குவதன் மூலம் இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் 22 பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்ட முடிந்துள்ளது என்றும் அதில் பத்து பில்லியன் ரூபாயை திறைசேரிக்கு வழங்கியுள்ளோம் என்றும் துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். 

அண்மையில் விமானம் தாமதம் காரணமாக ஏற்பட்ட இழப்பு 06 பில்லியன் டொலர்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
 
ஜனாதிபதி ஊடக மையத்தில்  நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

“பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நவீன தொழில்நுட்பத்துடன் அபிவிருத்தி செய்ததன் காரணமாக, தென்கிழக்கு ஆசியாவின் சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக சர்வதேச விமானப் போக்குவரத்து அதிகாரசபை பெயரிட்டுள்ளது.