சிவா முருகன்
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி நடத்திய சிறுவர்தின விழா கல்லூரி முன்றலில் இன்று திங்கட்கிழமை காலை (02) இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் திருமதி நவகீதா தர்மசீலனின் தலைமையில் நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வு "நாளைய உலகை வென்றிடுவோம்" எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டது .
இந் நிகழ்வில் ஆசிரியர்கள் , மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
இதன்போது மாணவர்களுக்கான அஞ்சல் ஓட்டம், சங்கீதக்கதிர , மிட்டாய் பொறுக்குதல் போன்ற பலவகையான போட்டி நிகழ்வுகள் இடம் பெற்றதோடு, அப்போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன .