பாக்கு நீரினையை நீந்திக் கடந்து மீண்டும் ஒரு சாதனையை நிலைநாட்ட தயாராகும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி சாரண மாணவர்கள்.

 



 












 

 




மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150 வது ஆண்டு பூர்த்தியை  முன்னிட்டு
 புனித மைக்கேல் கல்லூரில் பயிலும் இரண்டு சகோதரர்கள் உட்பட  மூன்று மாணவர்கள் இணைந்து பாக்கு நீரினை நீந்திக் கடந்து மீண்டுமொருமுறை சாதனையை நிலை நாட்ட இருப்பதாக  புனித மிக்கேல் கல்லூரியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது கல்லூரியின் அதிபர் தெரிவித்தார் .

2023.10.23 ம் திகதி  இந்தியாவின் தனுஷ்கோடி கரையில் இருந்து  பாக்கு நீரிணையைக் நீந்தி கடந்து  இலங்கையின் தலை மன்னாரை வந்தடைந்தடைய  இருக்கும்    சிரேஷ்ட சாரண மாணவர்களான புளோரிங்டன் டயன்ஸ்ரித், புளோரிங்டன் டயன் பிறிடோ மற்றும் இருதயநாதன் கெல்வின் கிசோ ஆகியோர் பிளாஸ்டிக் தொடர்பான  ஒரு விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காகவே குறித்த சாதனையை புரிய உள்ளதாக ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளனர் .