2023 ஆம் ஆண்டின் விமானச் சுழற்சி வசதிக் கட்டண விதிமுறைகள் எண். 1ஐத் திருத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திங்கட்கிழமை (09) கூடிய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த யோசனைக்கு அங்கிகாரம் கிடைத்துள்ளது.
கொழும்பு விமான தகவல் வலயத்தின் ஊடாக பறக்கும் விமானங்களுக்கு விமான போக்குவரத்து கட்டணத்தை விதிக்கும் வகையில் 1981 ஆம் ஆண்டு விமான போக்குவரத்து வசதிகள் ஒழுங்குமுறைகள் இயற்றப்பட்டன.குறித்த விதிமுறைகள் கடந்த காலத்தில் திருத்தப்படவில்லை என அரசாங்கம் கூறுகிறது.
எனவே, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் கொள்கைகள் மற்றும் தற்போதைய உலகளாவிய போக்குகளைக் கருத்தில் கொண்டு, விமான போக்குவரத்து வசதிகள் விதிமுறைகள் திருத்தப்பட்டு, விமானப் போக்குவரத்து வசதிகள் விதிமுறைகள் 2023 எண் 1 என வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.