பேருந்தின் மீது மரம் ஒன்று வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

 


- அளுதம்பலம பகுதியில் தனியார் பேருந்தின் மீது மரம் ஒன்று வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளதாக   தெரிவிக்கப்படுகிறது 

    122 ஆம் இலக்கத்தில் (கொழும்பு - அவிசாவளை) இயங்கும் தனியார் பேரூந்து ஒன்று கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி மாலை பெய்த கடும் மழைக்கு மத்தியில் பயணித்த போது மரம் ஒன்று பேரூந்தின் மீது வீழ்ந்துள்ளது.

இந்த சம்பவம் காரணமாக கொழும்பு - அவிசாவளை பிரதான வீதியில் வாகன போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.