(ஆர்.நிரோசன்) மேற்கு வலைய கல்வி மட்டக்களப்பு அலுவலகம் மற்றும்
ஏ.ஜு. லங்காஇணைந்து நடாத்திய சர்வதேச சிறுவர் தின நிகழ்வு தாண்டியடி பொது
விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு இன்று(01) காலை 8.00மணி தொடக்கம் மாலை 04.00 மணி வரை இடம்பெற்றது.
இதில்
சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள், சிறுவர்களின் நடனம்,ஓவிய
போட்டி, நிலையங்கள், கண்காட்சி கூடங்கள், இசை நிகழ்ச்சிக் கூடங்கள் என்பன
அமையப் பெற்றுள்ளன.
இந்நிகழ்வானது சைல்ட் பவ்ன்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன் பிரம்மாண்டமாக இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது
நூற்றுக்கணக்கான சிறுவர்கள் உட்பட பெரும்திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில்
நடத்தப்பட்ட சிறுவர்தின கட்டுரை, கவிதை, ஓவியம்,நடனங்கள், மற்றும்
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு சான்றிதழ்களும்
பெறுமதி மிக்க பரிசுகளும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.