இராஜாங்க அமைச்சர் டயனா கமகே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 


தாக்குதலுக்கு உள்ளான இராஜாங்க அமைச்சர் டயனா கமகே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்த பின்னர், ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்திய சாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தம்மை தாக்கியதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இன்று பாராளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகத்துக்கு அருகாமையில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.