அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக நாட்டில் மிகவும் ஆரோக்கியமான முதலீட்டு சூழலை பேணிச் செல்ல வேண்டிய தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, வணிகம்சார் விடயங்கள் தொடர்பில் தற்போது நிலுவையில் காணப்படும் அதிகளவிலான வழக்குகளுக்கு துரிதமாக தீர்வு காணப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக புதிய வணிக மேல் நீதிமன்றமொன்றை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நீதியமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.