ஓசோன் படையை பாதுகாப்போம் மற்றும் பொலித்தீன் பாவனையை தவிர்ப்போம்" எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு வீதி நாடகம் ஒன்று மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவிகளால் முன்னெடுக்கப்பட்டது .

 









 மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் சுற்றாடல் முன்னோடி கழக மாணவிகளால் செப்டம்பர் 16ஆம் தேதி அனுஷ்டிக்கப்பட்ட சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு " ஓசோன் படையை பாதுகாப்போம் மற்றும் பொலித்தீன் பாவனையை தவிர்ப்போம்" எனும் தொனிப் பொருளில் வீதி நாடகம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

 08.10.2023 அன்று பாடசாலையின் அதிபர் திருமதி தவத்திருமகள் உதயகுமார் தலைமையில் பிரதி அதிபர் திருமதி. அஞ்சலின்  தினேஷ்குமார்,  சுற்றாடல் கழகப் பொறுப்பாசிரியர் திருமதி சவிதா சிவசங்கர் மற்றும் பாடசாலையின் நாடக துறை பாட ஆசிரியர்கள், ஏனைய ஆசிரியர்கள், சுற்றாடல் கழக மாணவிகள், பெற்றோர்கள் பங்களிப்புடன் மட்டக்களப்பு மாநகர சபை பொதுச் சந்தையிலும் மட்டக்களப்பு பொது பஸ் தரிப்பு நிலையத்திலும் இவ்வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டது. இதற்கான நிதி அனுசரணையை YMCA நிறுவனத்தினரும், இதற்கான வழிகாட்டுதல்களை மட்டக்களப்பு மத்திய சுற்றாடல் அதிகார சபையினரும் வழங்கி இருந்தனர்.