இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ஹமாஸ் அமைப்பின் நிதி பரிவர்த்தனைகளை இஸ்ரேல் அரசு முடக்கியுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் இணையவழி பண பரிமாற்றங்களை முடக்கியுள்ளதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
மேலும் ஹமாஸின் கிரிப்டோகரன்சி தளத்தையும் முடக்கியுள்ள இஸ்ரேல், இதனால் ஹமாஸின் 90 சதவீத நிதி ஆதாரங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பு இந்த பணபரிவர்த்தனை முறையின் மூலம்தான் ஏராளமான ஆயுதங்களை வாங்கி குவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதனை தடுக்கும் வகையில் அவர்களின் பண பரிவர்த்தனை தடுத்து அதிரடியை காட்டியுள்ளது இஸ்ரேல்.
போர் வெடித்தவுடன், ஹமாஸின் அமைப்பு சமூக வலைதளங்களில் நிதி திரட்டும் பிரச்சாரத்தைத தொடங்கியதகாவும் பொதுமக்கள் தங்கள் கணக்குகளில் கிரிப்டோகரன்சிகளை டெபாசிட் செய்யும்படி வலியுறுத்தியதாகவும் இஸ்ரேல் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகவே இந்த முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் காவல்துறை தெரவித்துள்ளது.