இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் காணொளி ஒன்றை சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபர் கைது .

 


 இஸ்லாம் மற்றும் அல்லாஹ்வை அவமதிக்கும் வகையில் காணொளியை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வைத்து குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

அதேநேரம், அதற்காக அவர் பயன்படுத்திய கைத்தொலைபேசியும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக இரண்டு மௌலவிகள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் கடையொன்றை நடத்தும் நாற்பது வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.