ஆழ் கடலில் மீன்பிடி இழுவை படகு ஒன்றில் இருந்து போதைப் பொருட்களை கடற்படையினர் கைப்பற்றி உள்ளனர்

 



ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் தொகையுடன் 5 சந்தேகநபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அரச புலனாய்வுப் பிரிவு வழங்கிய தகவலுக்கு அமைய ஆழ்கடலில் பலநாள் மீன்பிடி இழுவை படகு ஒன்றை முற்றுகையிட்ட போது குறித்த போதைப்பொருள் தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் இழுவைப் படகு கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்படுவதாக இலங்கை கடற்படையின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.