இலங்கைப் பெண்ணான அனுலா ஜயதிலக்க இஸ்ரேலில் உயிரிழந்துள்ளார் .

 


ஹமாஸ் - இஸ்ரேல் போரில் காணாமல் போன இலங்கைப் பெண்ணான அனுலா ஜயதிலக்க உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது கடந்த 7ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் களனி பகுதியைச் சேர்ந்த அனுலா ஜயதிலக்க காணாமல் போயிருந்தார்.

இந்த நிலையில், காணாமல் போனதாக கூறப்பட்ட குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகளினால் இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு  (17) அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுலா ஜயதிலக்கவின் பூதவுடலை எதிர்வரும் இரு தினங்களுக்குள் நாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்த பெண் ஹமாஸ் தரப்பினரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரிகளை மேற்கோள்காட்டி இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.