இலங்கை பெற்ற கடன்களின் மறுசீரமைப்பிற்கு சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கியான எக்ஸிம் (EXIM) வங்கியுடன் ஆரம்பகட்ட உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக Bloomberg இணையத்தளம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவை தவிர ஏனைய இருதரப்பு கடன் வழங்குநர்களும் இலங்கைக்கு வழங்கிய கடன்களை மறுசீரமைப்பதற்கு எதிர்வரும் சில தினங்களில் இணக்கம் தெரிவிக்கவுள்ளனர்.
இலங்கையின் கடன் தொடர்பில் சீனாவின் EXIM வங்கி கடந்த மாதம் இணக்கப்பாட்டை எட்டியதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Wang Wenbin இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.