இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் அவர்களின் செயலாளரும் ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளருமான ஏ.ஏ. அப்துல் நாசர், இணைப்பாளரும் ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளரில் ஒருவருமான எம்.ஐ.ஏ. தஸ்லிம் , முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் காத்தான்குடி தொழில் வான்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின்(காத்தான்குடி போரம்) தலைவரும் சமூக பனியாளருமான யூ. எல். எம்.என். முபீன் , வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ. பைசல், பூநொச்சிமுனை முஹைதீன் ஜும்மா பள்ளிவாயல் தலைவர் அல்ஹாஜ் யு. எல். முஸ்தபா , அல் பரகத் கிராமிய மீனவர் அமைப்பின் தலைவர் எஸ்.எச்.ஏ. அஸீஸ், பூநொச்சிமுனை கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் ஏ.ஆர். ஹைதர் அலி, ஆழ்கடல் படகு உரிமையாளர் சங்க இணைப்பாளர் அல்ஹாஜ் ஏ. ஹனிபா, இவ்வேலையை நிறைவேற்றும் ஒப்பந்ததாரராகிய எம். ரஹ்மத்துல்லா காத்தான்குடி பதுரியா ஜும்மா பள்ளிவாயல் உறுப்பினர் எம். ரமழான் உட்பட பல பிரமுகர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
19 வருடங்களாக ஏங்கித் தவித்த மக்களின் தேவையும் காத்தான்குடி பிரதேசத்தின் நிலைபேறான அபிவிருத்தியின் ஒரு தேவைப்பாடும் நிறைவேறும் தருணம்.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது காத்தான்குடி கடலோர வீதி ஊடாக பூநொச்சிமுனை துறைமுக வீதியினை இணைக்கும் றிஸ்வி நகர் பிரதேச கடலோர வீதியானது முழுமையாக சேதமடைந்ததுடன் புதிதாக ஒரு நீரோடையும் தோற்றம் பெற்றது. இதன் பின்னர் இந்தப் பிரதேசத்தில் சேரும் வெள்ள நீர் மாரிகாலங்களில் நீரோடை ஊடாக வெட்டி கடலுக்கு வெளியேற்றப்பட்டு வந்தது.
2004 ஆம் ஆண்டின் பின்னர் இம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சுனாமி பாதிப்பு மீள் கட்டுமானத்தில் இவ்வீதி மற்றும் பாலம் என்பன நிர்மாணிக்கப்படாது கைவிடப்பட்டிருந்தது. சுனாமியினால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தின் அனைத்து உட்கட்டமைப்பு வேலைகளும் பல்வேறு திட்டங்களின் மூலம் முன்பு இருந்ததை விட மேம்பாட்டுடன் அபிவிருத்தி செய்யப்பட்ட போதும் இவ்வேலை மட்டும் செய்யப்படாது போனமைக்கு எமது பிரதேச அரசியல்வாதிகளினதும் நிர்வாக அதிகாரிகளினதும் இயலாமையே காரணமாகும்.
இவ்வீதி மீள நிர்மாணிக்கப்படாது இருந்தமையினால் பிரதேச மக்கள், மீனவர் சமூகம், சுற்றுலா பயணிகள் போன்றோர் மிகுந்த சிரமத்தினை கடந்த இது தசாப்த காலமாக அனுபவித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டில் இப்பால நிர்மாணத்தின் முக்கியத்துவம் மற்றும் தேவை என்பன தொடர்பாக முன்னாள் கௌரவ சுற்றாடல் அமைச்சர் அல்ஹாபிழ். ZA. நஸீர் அஹமத் அவர்களிடம் எம்மால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எமது வேண்டுகோளின் நியாயத்தன்மையினை ஏற்றுக் கொண்ட அவர்கள் அரசின் "கிராமிய பாலம் நிர்மான திட்டத்தின்" கீழ் இப்பாலத்தினையும் வீதியினையும் நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொண்டு இருந்தார்கள்.
இருந்தபோதும் அப்போது நாட்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு என்பவற்றினால் இவ்வேலை நடைபெறாது தடைப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் நாம் மீளவும் விடுத்த கோரிக்கைக்கினங்க முன்னாள் அமைச்சர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இப்பால நிர்மானத்திற்காக ரூபாய் 25 மில்லியன்(2.5 கோடி) நிதி ஒதுக்கீட்டினை பெற்றுத்தந்துள்ளார்கள்.
இப்பாலம் நிர்மாணிக்கப்பட்டு பூநொச்சிமுனை கடலோர வீதியுடன் இணைக்கப்படுவதன் மூலம் இப்பிரதேசத்தின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மீன்பிடித்துறை, வளர்ந்து வரும் சுற்றுலாத்துறை போன்ற முக்கிய துறைகளில் பெரும் மேம்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இரு தசாப்தகால தேவையாகிய இவ் அபிவிருத்தியினை ஊர் வேறுபாடு பார்க்காது நாட்டில் நிலவும் பொருளாதார பின்னடைவுக்கு மத்தியில் செய்து முடிப்பதற்கு பாடுபட்ட முன்னால் கௌரவ சுற்றாடல் அமைச்சர் அழ்ஹாபிழ்.ZA.நஸீர் அஹமத் அவர்களுக்கும் அவரது பனிக்குழாத்தினருக்கும் பிரதேச மக்கள் மீனவர் அமைப்புக்கள் பொது நிறுவனங்கள் என்பன நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றன. அத்துடன் முன்னாள் அமைச்சரின் தேக ஆரோக்கியத்துக்கும் அவரது அரசியல் எதிர்காலம் சிறப்பதற்கும் வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றார்கள்