இன்று காலை சிவானந்தா தேசிய பாடசாலை ஒன்றுகூடல் வேளையில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்றைய நிகழ்வில் பழைய மாணவர் சங்க தலைவர், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், மல்யுத்த பயிற்றுவிப்பாளர் திரு. திருச்செல்வம் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மல்யுத்த போட்டியின்மூலம்
தங்க பதக்கம்- 01
வெள்ளி பதக்கம் - 02
வெண்கல பதக்கம் - 02
Taekwondo போட்டியின் மூலம்
வெண்கல பதக்கம் - 01, என்ற அடிப்படையில் வெல்லப்பட்டிருந்தன .
பாடசாலை அதிபர் அதிபர் ( திரு. தயாபரன் ) பிரதி அதிபர் ( திரு. சுவர்ணேஸ்வரன் , திரு . மதிமோகன் ), உதவி அதிபர்( திரு மணிவண்ணன்) வெற்றிபெற்ற மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் , எமது பழைய மாணவரும்
மல்யுத்த பயிற்றுவிப்பாளருமான திரு. திருசெல்வம் ,உடற் கல்வி ஆசிரியர்கள் ( திரு. தினேஷ்குமார் , திரு. ராஜபவான், செல்வி. வேமனாதேவி) பயிற்று விப்பாளர்கள் ( திரு. கிஷோத் , திரு யசோதனன் )
ஆகியோர் இவர்களது சாதனை பின் புலமாக இருந்தது குறிப்பிட்ட தக்கது . மேலும் , 1997ம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதிய பழைய மாணவர்களும் மற்றும் 2003ம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதிய பழைய மாணவர்களும் இவர்களது இந்த வெற்றிகளுக்கு நிதி உதவி புரிந்து தமது பங்களிப்பை செய்திருந்தனர்.