பலஸ்தீனத்தின் காஸா பகுதியில் தங்கியிருந்த 11 இலங்கையர்கள் ஞாயிற்றுக்கிழமை (05) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
நாடு திரும்பிய இலங்கை பிரஜைகளை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் இன்று காலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் சென்று வரவேற்றனர்.
இவர்கள் காஸா பகுதியிலிருந்து ரஃபா கேட் வழியாகவும், கெய்ரோ விமான நிலையத்திலிருந்து கட்டார் மற்றும் எகிப்து ஊடாகவே கட்டுநாயக்க வந்தடைந்துள்ளனர்.