நேபாள நிலநடுக்கத்தில் 128 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

 


நேபாளத்தின் வடமேற்கு மாவட்டங்களில் நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 128 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க புவியியல் மையம், நிலடுக்கம் முதற்கட்ட அளவில் 5.6 ரிக்டர் பதிவானதாகவும், 11 மைல் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. அதன்பின் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தின் நிலநடுக்கம் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி தேசிய மையம், நேபாளம் தலைநகர் காத்மாண்டில் இருந்து 250 மைல் தூரத்தில் உள்ள ஜாஜர்கோட், நிலநடுக்கத்தின் மையப்புள்ளியாக இருந்தது எனத் தெரிவித்துள்ளது.

இந்திய தலைநகர் டெல்லியில இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால், டெல்லிவாசிகள் லோசான அதிர்வை உணர்ந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.