பாடசாலை கல்வி கற்றிராத 14 வயது சிறுமி காணாமற் போயுள்ளதாக பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

 


உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்டிமார் தும்பவத்தை தோட்டத்தில் வசிக்கும் தியாகராஜ் சரணியா (வயது 14) என்ற சிறுமி கடந்த (03.11.2023) வெள்ளிக்கிழமை பகல் 11 மணிக்கு பின் காணாமற் போயுள்ளதாக பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவ்வாறு காணாமற் போயுள்ள சிறுமியின் தந்தை கடந்த (01.11.2023) புதன் கிழமை கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூப்பனை கீழ் பிரிவு தோட்டத்தில் வசிக்கும் சிறுமியின் பாட்டி வீட்டில் தீபாவளி பண்டிகை முடியும் வரை பாட்டிக்கு துணையாக அழைத்து வந்து நிறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த (03.11.2023) காலை 11 மணியலவில் தனது தாயிடம் கைபேசியில் உரையாடி நலம் விசாரித்த சிறுமி அன்று பிற்பகல் முதல் காணாமற் போயுள்ளார்.

பாடசாலை கல்வி கற்றிராத இந்த சிறுமி கடந்த ஐந்து நாட்களாக காணாமற் போயுள்ளதாக சிறுமியின் தாய்,தந்தையர் கந்தப்பளை,மற்றும் உடப்புஸ்ஸலாவை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சிறுமியை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுப்பட்டுள்ள நிலையில் சிறுமியை கண்டால் அவர் தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையம் மற்றும் 075 620 3901 என்ற தொலைபேசிக்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் மற்றும் பெற்றோர் அறிவித்துள்ளனர். R