முல்லைத்தீவில் பாடசாலைக்கு சென்ற 15 வயதே ஆன மாணவி காணாமற்போயுள்ள நிலையில் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு, மாங்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கிழவன்குளம் பகுதியில் இருந்து கடந்த முதலாம் திகதி பாடசாலைக்கு சென்ற 15 வயதுடைய மாணவியே காணாமல் போயுள்ளதாக அவரது அவரது தாயாரால் மாங்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை குறித்த மாணவியான தமது மகள் தொடர்பான தகவல்கள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை என சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.