பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளனர்

 


மாபலகமவில் இருந்து மத்துகம ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை கலசேன பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.