தினமும் 4 மணி நேரம் வடக்கு காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும்- இஸ்ரேல்

 


தினமும் 4 மணி நேரம் வடக்கு காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. 

காசாவில் உள்ள மக்கள் மின்சாரம், எரிபொருள், குடிநீர் இன்றி தவித்து வருவதுடன், காயமடைந்தவர்களுக்கு சிசிச்சை அளிப்பதிலும் நெருக்கடி நிலவுகிறது.

இவற்றைக் கருத்தில் கொண்டு தற்காலிக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்து

இதன் எதிரொலியாக தினமும் 4 மணி நேரம் வடக்கு காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.