சிறுமி ஒருவரை தனது 44 வயதில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி 25 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்றபோது சந்தேகநபருக்கு 44 வயதாகும். தற்போது அவருக்கு 66 வயதாகு
இச்சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கு இணங்க பொலிஸார் எம்பிலிப்பிட்டிய செவனகல மஹகம பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபருக்கு எதிராக எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
சிறுமி மீது குறித்த நபர் 2011 ஆண்டு பல முறை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கின் தீர்ப்பு 12 ஆண்டுகளுக்கு பின் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
தீர்ப்பினை வழங்கிய நீதிபதி புத்திக சீராகல சிறைத்தண்டனையுடன் சிறுமிக்கு 2 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈட்டை வழங்குமாறும் 25,000 ரூபாய் அபராதத்தை செலுத்துமாறும் தீர்ப்பளித்தார்.