மட்டக்களப்பு மயிலத்தமடு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்த தென்னிலங்கை ஊடகவியலாளர்கள், போராட்டக்காரர்களின்
நிலைப்பாடுகளை கேட்டறிந்தனர்.
56 வது நாட்களைக் கடந்து மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரைப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்
வேலன் சுவாமிகளும் இணைந்திருந்தார்.
வேலன் சுவாமி உணவு தவிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டார்.
மனித உரிமை செயற்பாட்டாளரான ருக்கிபெனாண்டோ, தென்னிலங்கை ஊடகவியலாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.