பங்களாதேஷ் அரசினால் எதிர்வரும் வாரத்தில் 58,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள மருத்துவ உதவிகள் வழங்கப்படவுள்ளது.
அந்த மருந்துகளில் 54 அத்தியாவசிய மருந்துகள் இருப்பதாக பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தரேக் அரிபுல் இஸ்லாம், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் நடத்திய சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் இருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.