மட்டக்களப்பில் குளவி தாக்குதலில் 8 மாணவர்கள் பாதிப்பு - குளவி கூடுகளை அகற்ற பொலிஸார் நடவடிக்கை.

 



மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் பாடசாலை மாணவர்கள் மீது குளவி தாக்கியதில் 8 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தாண்டியடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று  (08) திகதி காலை 7.00 மணியளில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுணதீவு கன்னங்குடா மகா வித்தியாலயத்தில் கல்விகற்றுவரும் மாணவர்கள் சம்பவதினமான நேற்று  காலை 7.00 மணியவில் வீதியால் நடந்து சென்ற நிலையில் குறிஞ்சாமுனை பகுதியில் வீதிக்கு அருகிலுள்ள பனைமரத்தில் கூடுகட்டியுள்ள குளவிகள் மாணவர்கள் மீது தாக்கியதையடுத்து 8 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அருகிலுள்ள தாண்டியடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மேலும் குளவி கூடுகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதுடன், மேலதிக நடவடிக்கையினை எடுத்துவருதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.