மட்டக்களப்பு புனாணையில் நிர்மாணிக்கப்பட்ட ஹிஸ்புல்லாஹ் தனியார் பல்கலைக்கழகத்தை (Batti campus ) கையளிக்கும் நிகழ்வு .2023-11-04

 




 



















சிவா முருகன்

 மட்டக்களப்பு புனாணையில் நிர்மாணிக்கப்பட்ட   ஹிஸ்புல்லாஹ் தனியார் பல்கலைக்கழகம்(Batti campus ) பல வருடங்களுக்குப் பின் மீண்டும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும் மட்டு பல்கலைக்கழக தவிசாளருமான  எம்.எல்.ஏ எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
2019-ஆண்டு இடம் பெற்ற ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து  அரசாங்கத்தினால்  கையகப்படுத்தப்பட்ட,  பல்கலைக்கழகம்  இராணுவத்தின் கீழ் வந்தது .  
மட்டக்களப்பு    பல்கலைக்கழகம்  மீளவும் திறப்பது தொடர்பில்    ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
அவரின் கோரிக்கையை பரிசீலனை செய்து , இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில்  பல்கலைக்கழகத்தில்  இருந்து   வெளியேறியிருந்த  நிலையில்
 அதி மேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தீர்மானத்திற்கு அமைய 04 சனிக்கிழமை    கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள் ஜனாதிபதியின் பிரதிநிதியாக வருகை தந்து இப் பல்கலைக்கழக கட்டிடத்தின் திறவுகோலை சம்பிரதாய பூர்வமாக கையளித்தார் .பேராசிரியர்களும் , கல்வி மான்களும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .