ஹமாஸ் அமைப்பின் கோட்டை எனப்படும் வடக்கு காசா பகுதியின் மேற்கு ஜபல்யா பகுதியை கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

 


 

ஹமாஸ் அமைப்பின் கோட்டை எனப்படும் வடக்கு காசா பகுதியின் மேற்கு ஜபல்யா பகுதியை கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த பிரதேசம் காசாவிற்கு வடகிழக்கே நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

ஹமாஸின் கோட்டை என கருதப்படும் இந்த பிரதேசத்தை கைப்பற்றும் முயற்சியில் 50 ஹமாஸ் அமைப்பினர் கொல்லப்பட்டதுடன் ஜபல்யா பிரதேசத்தின் ஹமாஸ் அமைப்பின் தளபதி இப்ராஹிம் பியாரியும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகள் கடலோரப் பகுதிக்கு செல்ல பயன்படுத்தப்பட்ட இடத்தில் உள்கட்டமைப்புகள் மற்றும் பயங்கரவாத சுரங்கங்கள் இருந்தன. இந்த கோட்டையில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்திய பல ஆயுதங்கள் இருப்பதாகவும் இஸ்ரேலிய இராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இஸ்ரேலிய தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகளும் காயமடைந்தனர் என அவர் மேலும் தெரிவித்தார்.