வீடொன்றில் மண்சரிவு ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்?

 


பலாங்கொடை கவரன்ஹேன பிரதேசத்தில்  ஞாயிற்றுக்கிழமை (12) வீடொன்றில் மண்சரிவு ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.

மண்சரிவில் அவர்கள் சிக்கியுள்ளார்களா அல்லது ஏற்கனவே வெளியேறிவிட்டார்களா என்பதை உறுதிப்படுத்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தை, தாய் மற்றும் அவர்களது இரு மகள்கள் எங்கிருக்கிறார்கள் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் காணாமல் போயுள்ளதாக நம்பப்படுகின்றது.

மண்சரிவினால் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், அப்பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களை 08 ஆவது கெமுனு ஹேவா படைப்பிரிவின் இராணுவப் படையினர் பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துள்ளதாக அறியமுடிகின்றது.