மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய பாடசாலையிற்கு தென் ஆபிரிக்க நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் விஜயம்!!

 
 












கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களது அழைப்பின் பேரில் மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய பாடசாலைக்கு
தென் ஆபிரிக்க நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு 150 வருட பழமைவாய்ந்த பாடசாலையினை பார்வையிட்டுள்ளார்.
இதன்போது புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர் ஏ.வீ.ஜோசப் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் போது
தென் ஆபிரிக்க நாட்டிற்கான உயர்ஸ்தானிகர் ( Sandile Edwin Schalk ) சாண்டிலே எட்வின் ஷால்க் அவர்களை கௌரவிக்கும் வகையில் நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன், பாடசாலையில் 150 வருட வரலாற்றை எடுத்துக் கூறும் நூற்றாண்டு விழா நூலொன்றும் இதன்போது உயர்ஸ்தானிகர் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு விசேட அதிதியாக கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தவிசாளர்
ஏ.பீ.மதனவாசன் மற்றும் உயர்ஸ்தானிகரின் செயலாளர்,
மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் வி.பிரதீபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
இலங்கை மக்களுடன் தென் ஆபிரிக்க நாடு நல்லிணக்கத்துடன் செயற்படுவதாக இதன் போது உயர்ஸ்தானிகர் குறித்த நிகழ்வில் உரையாற்றும் போது கருத்து தெரிவித்ததுடன், புனித மிக்கேல் பாடசாலைக்கு ரக்பி விளையாட்டை ஊக்கு விப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற் கொள்வதாகவும் இதன் போது கருத்து தெரிவித்திருந்தார்.