ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கே.டி.சித்ரசிறியினால் தயாரிக்கப்பட்ட புதிய கிரிக்கெட் யாப்பை அமுல்படுத்துவதே கிரிக்கெட் நெருக்கடிக்கு சிறந்த தீர்வாக அமையும் என தெரிவித்துள்ளார்.
தாம் எந்தப் பக்கமும் நிற்கப் போவதில்லை என்றும் இலங்கை கிரிக்கெட்டுக்காக நிற்பேன் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஐ.சி.சி.க்கு முரணாக செயற்படாமல் கவனமாக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இடைக்கால குழுக்கள் போன்ற தற்காலிய தீர்வுகள் பலனளிக்காது என தெரிவித்துள்ள ஜனாதிபதி, புதிய யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நிர்வாகத்துக்காக அது தொடர்பான சபை ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.