கல்குடா தொகுதியில் வசிக்கும் விவசாயிகளின் நீண்டகால கனவை நனவாக்கிய முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்

 

 








கல்குடா தொகுதியில் வசிக்கும்  பெரும்பாலான  விவசாயிகளின்  விவசாய  நிலங்களை  கொண்ட  பிரதேசமாக கிடச்சிமடு ஆத்திச்சேனை மாக்குப்பை  எனும்  விவசாயம்  மேற்கொள்ளும் இடங்களாகும்.   அந்த வகையில் இந்த விவசாய நிலங்களுக்கு செல்லும் வீதியானது  குன்றும் குழியுமாக காணப்பட்டு விவசாயிகள் தங்கள்  அறுவடை  காலத்தில் நெல் மூடைகளை  கொண்டு  செல்வதில் கடுமையான கஷ்டத்தை  அனுபவித்த வந்தனர்.

இவ்வீதியினை  அமைச்சரின்  காலத்தில் செப்பனிடப்பட  வேண்டும் என்று அயராது  உழைத்து  தொடர்ச்சியாக அமைச்சரின் கவனத்திற்கு காவத்தமுனை வட்டார அமைப்பாளரான சியாம்  ஹாபிஸ் கொண்டு சென்றதன் பலனாக  அமைச்சரின்  நிதி  ஒதுக்கீட்டில்   ரிதிதென்னை தொடக்கம் மாக்குப்பை வரையிலான 06 km  வீதியானது  காபட்  மற்றும் கொங்ரீட் வீதியாக 100 மில்லியன் ரூபா   செலவில் புனரமைப்பு  செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இவ்வீதிக்கு  நிதி ஒதுக்கீடு செய்து தந்த அமைச்சருக்கு அங்கே உள்ள விவசாய அமைப்புகள் மற்றும் ஜாமியுல் அக்பர் பள்ளிவாசல் நிர்வாகிகள் விவசாயிகள் பளரும்  பெரும்  மகிழ்ச்சியுடன்   நன்றியை  தெரிவித்து  வருகின்றனர்

அத்தோடு முன்னாள் அமைச்சர் நஸீர்  அஹமட் அவர்களின் முயற்சியினூடாக பல்வேறு அபிவிருத்தி பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

 அந்த வகையில் வீதி அபிவிருத்தி பணிக்காக மேலும் கல்குடா பிரதேசத்தில் பௌண்ட்ரி வீதி,  மத்திய வீதி - ரிதிதென்னை, பொத்தானை வீதி,வாகனேரி  ஆகிய வீதிகள் முன்னாள் அமைச்சரின் முன்மொழிவுக்கு உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் அபிவிருத்தி செய்வதற்கான அனுமதி கிடைக்கப்பெற்று அதற்கான வேலைகள் விரைவில் இடம் பெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.