காலி நகரின் பல வீதிகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன .

 


காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் பெய்த அடை மழையால் பல வீதிகள் மற்றும் தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

காலி நகரின் பல வீதிகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மேலதிக வகுப்புகளைச் சுற்றியுள்ள பல வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியதால் வகுப்புகளுக்கு வந்த மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

பிடிகல பிரதேசத்திலும் பல தாழ்வான பகுதிகள் மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.