மட்டக்களப்பில் காட்டு யானைகளின் அட்டகாசம் .

 


மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியிலிருந்து மட்டக்களப்பு வாவியின் ஊடாக  எழுவாங்கரைப் பகுதிக்கு இரண்டு காட்டு இன்று (03)  அதிகாலை  உட்புகுந்துள்ளதனால்  அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதிகாலை சுமார் 3 மணியளவில் இக்காட்டு யானைகள் மட்டக்களப்பு வாவியை கடந்து களுதாவளைக் கிராமத்திற்குள் உட்புகுந்தள்ளன. 

இவ்வாறு கிராமத்திற்குள் உட்புகுந்த இரு காட்டு யானைகள், தோட்டங்களையும் வீட்டு  வேலிகளையும்,  துவம்சம் செய்துவிட்டு மாங்காடு கிராமத்தில் அமைந்துள்ள  தோட்டங்களுக்குள் உட்புந்துள்ளன.

தற்போது வனஜீவராசிகள் பாதுகாப்பு திணக்கள  யானைகளை விரட்டியுள்ளனர்.

மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.