இஸ்ரேலின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள காஸாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற முதன்முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டினர், காயமடைந்தோா் மட்டும் காஸாவில் இருந்து எகிப்து செல்ல குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் சிக்கியுள்ள வெளிநாட்டினரும் காயமடைந்துள்ள பாலஸ்தீனா்களும் ராபா நகர எல்லை வழியாக எகிப்துக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.