லண்டன் செல்ல அனுமதி கோரும் முருகன் .

 


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி திருச்சி சிறப்பு முகாமில் உள்ள முருகன் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

முருகனின் மகள் இங்கிலாந்தின் தலைநகரமான லண்டனில் வசிக்கிறார்.

இந்நிலையில் மகளுடன் சேர்ந்து வாழ லண்டன் செல்வதற்கான விசா பெறுவதற்கு அடையாள அட்டை தேவைப்படுவதால் அதற்கு விண்ணப்பிக்க ஏதுவாக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வழங்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.