கிரான் பழைய மாணவர் அமைப்பு மட்/ககு/ கிரான் மத்திய கல்லூரியுடன் இணைந்து நடைமுறைப்படுத்தும் ஆளுமை விருத்திக்கான விசேட செயற்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 24 கழகங்களில் மாணவர் மென்திறன் கழகம், இளம் கண்டுபிடிப்பாளர் கழகம் மற்றும் ஊடக கழகம் என்பவை கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் அவர்களினால் உத்தியோக பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
மட்/ககு/ கிரான் மத்திய கல்லூரியின் அதிபர் மா.தவராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் எஸ் .ராஜ்பாபு, கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி க.அருளானந்தம், கல்குடா பிரதி கல்விப்பணிப்பாளர் கே.ஜெயவதனன், கணபதி பூஜா துரந்தரர் சிவஸ்ரீ.மு.சண்முகம், கிரான் மெதடிஸ்த திருச்சபையின் குரு அருட்திரு. வே.உதயகுமார், மட் /ககு/கிரான் புதுக்கொலனி சிவவித்தியாலய அதிபர் ரீ.தமிழ்வாணன், மட் /ககு/ கிரான் விவேகானந்தா வித்தியாலய அதிபர் திருமதி.சுமித்ரா விஜியானந்தம். மற்றும் கிரான் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அதிதிகளாக கலந்து கொண்டதுடன், கல்லூரியின் இணைப்பாசிரியர்கள், பழைய மாணவர் அமைப்பின் நிருவாக சபை உறுப்பினர்கள், வகுப்பு இணைப்பாளர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.