மட்டு. மறை மாவட்ட கத்தோலிக்க இளையோர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி!






(கல்லடி செய்தியாளர்)

மட்டக்களப்பு மறைமாவட்ட கத்தோலிக்க இளையயோர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றது.

இவ் நடைபவனி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் இடம்பெற்ற திருப்பலி பூஜைகளைத் தொடர்ந்து மட்டக்களப்பு திருமலை வீதியூடாக இருதயபுரம் இருதய ஆண்டவர் தேவாலயத்தை அடைந்து நிறைவுற்றது.

இவ் விழிப்புணர்வுப் பேரணி "இளைஞர்களாகிய நாம் விரைவாக எழுந்து முன்னே நடக்க வேண்டும்" எனும் தொனிப் பொருளில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்ட இளைஞர் யுவதிகள் "சோம்பேறிகளே எவ்வளவு நேரம் படுத்திருப்பீர்கள்? தூக்கத்திலிருந்து எப்போது எழுவீர்கள்?", "நீங்கள் தனியாக இல்லை. உதவியுள்ளது", "போதைப்பொருள் பாவனை, பிளாஸ்டிக் பாவனை வேண்டாம்", "அதிகரித்த தேலைபேசி பாவனை வேண்டாம்" போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கிச் சென்றனர்.

இந் நடைபவனியில் குருமுதல்வர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டனர்.

இதேவேளை கடந்த வாரம் இச்சம்மேளனத்தினர் காலநிலை மாற்றம் மற்றும் ஆங்கில அடிப்படைச் செயலமர்வினை தெரிவு செயய்யப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.