ஜனாதிபதி அலுவலகத்தில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட தீபாவளி கொண்டாட்ட நிகழ்வு இடம்பெற்றது.

 




 

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று  (ஞாயிற்றுக்கிழமை 12) மாலை ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட தீபாவளி கொண்டாட்ட நிகழ்வு இடம்பெற்றது.

 ஜனாதிபதி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கொண்டாட்டம் இந்து சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு மிகவும் எளிமையாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்றது.

 இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதிக்கு இந்து சமய கலாச்சார முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

 கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜா மற்றும் விசேட விருந்தினர்கள், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உட்பட ஜனாதிபதி அலுவலக உயர் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.