இலங்கையில் சீன மொழி மையம் ஒன்று நிறுவப்பட உள்ளது .

 


சீனாவின் ஷாங்காய் திறந்த பல்கலைக்கழகத்திற்கும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் இடையில் உயர்கல்வி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒத்துழைப்புப் பகுதிகளின் கீழ் இலங்கையில் சீன மொழி மையம் ஒன்றை நிறுவுவது தொடர்பாக இலங்கை திறந்த பல்கலைக்கழகம், ஷாங்காய் திறந்த பல்கலைக்கழகம் மற்றும் சீன வங்கி லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையே முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதன்படி, ஐந்து வருடங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் உரிய உடன்படிக்கைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.