அமெரிக்க அதிபர் ஜோபைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அப்போது மனிதாபிமான முறையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையே போர் தொடங்கி 32 நாட்களாகி விட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்த போரில் அப்பாவி குழந்தைகள், பொதுமக்கள் பலியாகி வருவதால் போரை உடனே நிறுத்த வேண்டும் என பல உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
காசாவில் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வரை காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் பின்பற்ற வேண்டும் என ஜோபைடன் இஸ்ரேல் பிரதமரிடம் வலியுறுத்தினார்.