மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் கடமைபுரியும் போதைப்பொருள் முற்தடுப்பு செயற்பாடுகளில் ஈடுபட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய நிறைவேற்று பணிப்பாளர் சம்பத் டி சேரம் பங்கு பற்றுதலுடன் மாவட்ட செயலகத்தில் நேற்று (07) இடம் பெற்றது.
மாவட்ட செயலகம் மற்றும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்துடன் இணைந்து ஆறு மாத காலமாக இப்பயிற்சி நெறியை மேற்கொண்டனர்.
இப்பயிற்சி நெறியினை நிறைவு செய்த உத்தியோகத்தர்கலினால் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பதாதைகள் மற்றும் சுவர் ஒட்டிகள் மாவட்ட செயலகத்தில் காட்சி படுத்தப்பட்டதுடன், இவர்களால் முன் அளிக்கை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது 88 உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இப்பயிற்சி பாசறையில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூதாயம் சார் சீர்திருத்த உத்தியோத்தர்கள், போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர்கள் உளவளத் துணை உத்தியோகத்தர்கள் பங்கு பற்றியிருந்தனர்.
இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன்,கிழக்கு மாகாண புனர்வாழ்வு பொறுப்பதிகாரி லெப்டினன் கெனல் சன்டிக்க எகலப்போல, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய நிகழ்ச்சி திட்ட பணிப்பாளர் அமர்நாத் தென்ன,மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய சிரேஸ்ட நிகழ்ச்சி அதிகாரி ஏ.சி.றஹீம், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச்சபையின் மாவட்ட இணைப்பாளர் பி.தினோஸ் என பலர் கலந்து கொண்டனர்.