உலக கிண்ணப்போட்டிகளில் மிகமோசமாக விளையாடியமைக்காக நாட்டில் கிரிக்கெட்டை நேசிக்கும் மக்களிடம் இலங்கை கிரிக்கெட் அணி மன்னிப்புக் கோருவதாக இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கட் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியுடன் இன்று (12) காலை கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2023உலக கிண்ணப்போட்டிகளில் மோசமாக விளையாடும்படி எந்த தரப்பும் இலங்கை அணிக்கு அச்சுறுத்தல் அல்லது வெளி அழுத்தங்கள் எதுவும் இல்லை என இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.