ஹமாஸ் அமைப்பினர் தோல்வியை ஏற்று சரணடைந்தால் மட்டுமே போர் நிறுத்தம் குறித்து பரிசீலிக்க முடியும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
அத்துடன் காசா பகுதியை ஆக்கிரமிக்கும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் காசா பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ் அமைப்பை பலவீனப்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் வெற்றிகரமாக போரிட்டு வருகிறது. எனவே போர் நிறுத்தத்திற்கு செல்ல வேண்டிய தேவையோ விருப்பமோ இல்லை தமக்கு இல்லை.
அத்துடன், காசா பகுதியை ஆக்கிரமிக்கும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பினர் தோல்வியை ஏற்று சரணடைந்தால் மட்டுமே போர் நிறுத்தம் குறித்து பரிசீலிக்க முடியும் என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.