போரின் முடிவில், காசாவில் ஹமாஸ் இருக்காது.

 


இஸ்ரேலியப் படைகள் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வாரை நெருங்கி அவரைக் கொன்றுவிடுவார்கள் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் தெரிவித்தார்.

காஸா மீதான இஸ்ரேல் படையினரின் படை நடவடிக்கையின் முன்னேற்றங்கள் தொடர்பில் சனிக்கிழமை மாலை விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், "போரின் முடிவில், காசாவில் ஹமாஸ் இருக்காது. இஸ்ரேலிய குடிமக்களுக்கு அந்தப் பகுதியிலிருந்து எந்த அச்சுறுத்தலும் இருக்காது" என்றும் கேலன்ட் கூறினார்.