எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பசில் களம் இறங்குவாரா ?

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமெரிக்க குடியுரிமையை கைவிடுமாறு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே ஐக்கிய மக்கள் கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி ஆகியன ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ளன.

குறித்த கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வரும் பின்னணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் வேட்பாளரை அறிவிக்காதது அரசியல் ரீதியாக பாதகமானது என  மூத்த தலைவர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.