ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பயணித்த உலங்குவானூர்தி மோசமான காலநிலை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

 


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நுவரெலியா நோக்கி பயணித்த உலங்குவானூர்தி மோசமான காலநிலை காரணமாக நேற்று  (3) பிற்பகல் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஜனாதிபதி பயணித்த உலங்குவானூர்தி திடீரென வெல்லவாய புத்ருவகல பாடசாலை மைதானத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

அங்கு ஜனாதிபதி சுமார் 50 நிமிடங்கள் காத்திருந்தார். அதன் பின்னர் வாகனத்தின் மூலமாக நுவரெலியாவுக்குச் சென்றார்