அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சி நெறியின் இறுதி நாள் கலை நிகழ்வு.

 


















 
அரச உத்தியோகத்தர்களுக்கான தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் இரண்டாம் மொழி பயிற்சி நெறி நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச உத்தியோகத்தர்களுக்கான சிங்கள பயிற்சி நெறி பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவின் மேலதிக செயலாளர் அனுராத விஜேகோன் தலைமையில் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இடம் பெற்றது.
உத்தியோகத்தர்களின் இரண்டாம் மொழியாற்றலை அதிகரிப்பதுடன் அலுவலக கடமையில் ஈடுபடும் போது தொடர்பாடலை மேம்படுத்துவதாக இக் கற்கை நெறி அமைந்திருந்தது.
இந் நிகழ்வின் போது சிங்கள பாரம்பரிய கலை கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உத்தியோகத்தர்களினால் நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது.
150 மணித்தியாலங்களைக் உள்ளடக்கிய இக்கற்கை நெறியை உத்தியோகத்தர்கள் சிறப்பாக கற்று நிறைவு செய்துள்ளனர்.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஆ.நவேஸ்வரன், பொது நிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவின் திட்ட உத்தியோகத்தர் ஹேமந்த புஸ்பகுமார, மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.மதிவண்ணன், மாவட்ட தகவல் அதிகாரி வி.ஜீவானந்தன், மாவட்ட செயலகத்தின் இரண்டாம் மொழி கற்கையின் இணைப்பாளர் வி.சந்திரகுமார் மற்றும் குறித்த பாடநெறிக்கான வளவாளர்களான எம்.மாணிக்கவாசகம், செல்வி.எம்.கே.திலினி மதுசிகா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.