காசா மருத்துவமனையில் சுமார் ஆயிரம் காசா குடியிருப்பாளர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த ஹமாஸ் தளபதி ஒருவர் தமது வான் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
வைத்தியசாலையில் இருந்து காசா மக்களை வெளியேறுவதை தடுக்கும் வகையில் அவர் செயற்பட்டதாக இஸ்ரேல் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் தளபதியான அகமது சியாம் எனபவரே கொல்லப்பட்டவராவார்.
ஒக்டோபர் 07 ஆம் திகதி தாக்குதல் தொடங்கியதிலிருந்து இதுவரை ஹமாஸ் அமைப்பின் பல தளபதிகளை கொன்றுள்ளதாக இஸ்ரேல் படைத்தரப்பு அறிவித்துள்ளது.